வாயிலை நோக்கி நடந்த மணியின் மனதை, அவர் சொன்னதை காட்டிலும், அந்த பிச்சைக்கார சாமியாரின், அம்மை கட்டிகளும், அதைத் தாண்டிய சினேகமான சிரிப்புமே நிறைத்திருந்தது.

*************

ஆழிப் பெருஞ்சுழி போல், அகோரப் பசியுடன், அவனை உண்டு கொண்டு இருந்தது, அந்தப் பார்வை. கண்ணாடியின் முன்னால் இருந்த டேபிளில், கைகளை ஊன்றிக் கொண்டு, தனது பிம்பத்தின் கண்களில், பார்வையைப் பதித்து இருந்தான், மணி. இரண்டு வருடங்களில் முதல்முறையாக, அவன் கண்களின், பசி தீர்க்கும் இரை, தான்தான் என்பதை உணர்ந்தான்.

ஊத்துல பொங்கினாலும்!!
உப்பாக் கரிச்சா?!!
தேனா இணிச்சாலும்!!
குட்டையில தேங்கினா?!!
தண்ணிய!!,
அள்ளிக் குடிக்க முடியுமா?
அப்படி..
நீ குடிச்சாலும்!!
ஆறா தாகம்.. தீருமா?

அவன் ரோட்டை அடையும் போது, அந்தப் பிச்சைக்கார சாமியார், பாடிய பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, அவன் மனதில்.

ஆறாத் தாகம் தீர்க்க துணிந்தான். அந்த வீட்டிலிருந்த அனைவரது மனதும் இருக்கமாக இருந்தது. பெரியவர்களும் மூவருடன், சுமா, பழனி வீட்டின் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தாள். மணியை, அவன் பெரியப்பாவின் சமாதியில் தனித்து விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்ததும், தன் மனதில் இருந்த உறுத்தலை, பெரியவர்களிடம் கொட்டிவிட்டாள். மாலை, பொழுது அடைந்த பின்பே வீட்டுக்கு வந்த மணி, அறையில் தன்னை வைத்து அடைத்துக் கொண்டவன்தான், இன்னும் கதவை திறக்கவில்லை. சாப்பிடக் கூட வரவில்லை, மணியின் தாத்தாவும், அவனாக வரட்டும், அதுவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டதால், அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் பேசாமல், தத்தமது சிந்தனைகளில் மூழ்கி இருந்தனர்.

பெற்றது சுமாவா இருந்தாலும், வளர்த்தது பெரியவர்கள் மூவருமே. வீட்டிற்கு வந்ததுமே, அவனது முகபாவத்தில் இருந்து, சுமா சொன்னதை உணர்ந்திருந்தார்கள். ஒரு கம்பெனியின் நிர்வாகத்தை மொத்தமாக கைப்பற்றும் போது, 20 சதவீத பங்குகளை, பழைய உரிமையாளருக்கு, விற்கப்படும் விலையிலேயே, கொடுக்கப்பட வேண்டும், என்பது பங்குச்சந்தை விதி. விற்பவர், அப்படி வாங்க விருப்பம் இல்லாத பட்சத்தில் மட்டுமே, முழுவதுமாக வாங்க முடியும். அவினாஷ் தாக்கர், கடைசியாக இதற்குத்தான் கடுமையாக முயற்சி செய்தார், முடியாது போகவே, அரைமனதுடன் தான் மொத்தத்தையும் விற்க ஒப்புக்கொண்டார். அது சம்பந்தமாக ஏதாவது, நெருக்கடி இருக்குமோ? என்று மணியின் தாத்தாவின் மனது சிந்தித்துக் கொண்டிருந்தது. மணியின் சின்ன ஆச்சியின் மனது, பேரன் தன் வயதுக்கான வாழ்க்கை வாழாமல், இந்த வயதிலேயே அத்தனை பொறுப்புக்களையும் சுமந்து தெரிவதால்தான், வாய்விட்டு, சிரிக்கவும் மறந்துவிட்டான் என்று புலம்பிக் கொண்டிருந்தது. சுமாவோ, தனது கையாலாகாத தனத்தை நிணைத்து தனனேயே நொந்து கொண்டிருந்தாள்.

மணியின் பெரிய ஆச்சியின் நிலைதான், மற்ற மூவரை காட்டிலும் மோசமானதாக இருந்தது. இளம் வயதிலேயே கணவனை இழந்தவள், தலைமகனை, சிறுவயதிலேயே இறைவனுக்கு வாரிக்கொடுத்து, பேர், புகழோடு, வாழ்ந்த இரண்டாவது மகன், உடல் நலம் குன்றி, தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு துன்பப் படுகிறான் என்றால், தலைமகனே திரும்பிவந்து பிறந்து விட்டான் என்று தன் தலையில் வைத்துக் கொண்டாடிய பேரனின் வாழ்வை நினைத்து, என்ன வாழ்க்கை வாழ்ந்தோம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள். இப்படி, இவர்கள் நான்கு பேரும் ஹாலில் அமர்ந்து ஒருவருக்கொருவர் பேசாமல், நிம்மதி இழந்து தவித்து இருக்க, மணியோ கையிலிருந்த தூக்க மாத்திரைகளை உருட்டிக் கொண்டிருந்தான். வெறுமையின் கனம் தாங்காது, தூக்கம் வராத இரவுகளில், அவன் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள். மொத்தமாக விழுங்கிவிட்டு, தீராத இந்த மனச்சோர்வையும், உடல் சோர்வையும், மொத்தமாக தீர்த்துவிடலாமா? என்ற ஒரே கேள்விதான், அவன் மனதில். காலை தன் தாயிடம் இருந்து வெளிப்பட்ட அந்த பரிதாபப் பார்வை, பெரும் மனபரத்தை கொடுத்தது அவனுக்கு. கதவு தட்டப்பட, கையிலிருந்த மாத்திரைகளை மெத்தைக்கு அடியில் ஒளித்தவன், கதவை திறந்தான்.

"சாப்பிடலையா?? தங்கம்!!" மணியின் பெரியாச்சி, திறந்த கதவின் வெளியே நின்று இருந்தாள்.

"நீங்க சாப்பிடுங்க!! கொஞ்சம் நேரம் ஆகட்டும்!!" முகத்தில் உணர்வுகளை காட்டாதவன், வெருமையாகச் சொன்னான்.

"நாங்கள் எல்லாம் சாப்பிட்டோம் கண்ணு!!, மணி பத்தாவுது!!" கெஞ்சினாள்.

"பசி இல்ல!! கொஞ்சம் பால் மட்டும் குடுங்க!!" அவள் கெஞ்சலுக்காக இறங்கியவன், மெத்தையில் அமர்ந்து கொண்டான்.

இரண்டு நிமிடம் கழித்து, கையில் தட்டு வந்தாள்,

"பால் அடுப்புல இருக்கு!! ஒரு ரெண்டு வாய் மட்டும் சாப்பிட்டு!!" அவனின் பதிலை எதிர்பாராம

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here