"நாங்கள் எல்லாம் சாப்பிட்டோம் கண்ணு!!, மணி பத்தாவுது!!" கெஞ்சினாள்.

"பசி இல்ல!! கொஞ்சம் பால் மட்டும் குடுங்க!!" அவள் கெஞ்சலுக்காக இறங்கியவன், மெத்தையில் அமர்ந்து கொண்டான்.

இரண்டு நிமிடம் கழித்து, கையில் தட்டு வந்தாள்,

"பால் அடுப்புல இருக்கு!! ஒரு ரெண்டு வாய் மட்டும் சாப்பிட்டு!!" அவனின் பதிலை எதிர்பாராமல், ஊட்டி விட ஆரம்பித்தாள்.

இதையே அவள் நேற்றிரவு செய்திருந்தால், மறுத்திருப்பான். இல்லை, இல்லை, இப்படி ஒரு சூழ்நிலையே ஏற்படாதவாறு, தவிர்த்திருப்பான். எதுவும் பேசாமல், அவள் ஊட்டியதை, சாப்பிட ஆரம்பித்தான். இரண்டு வாய் என்றவள், மொத்தத்தையும் ஊட்டி முடிக்கும்போது, அவனது சின்ன ஆச்சி, கையில் பாலுடன் வந்தாள். எதுவும் பேசாமல் அதை வாங்கி கொடு குடித்தவன், பாத்ரூம் சென்று வாய் கொப்பளித்து விட்டு வந்தவன், படுத்துக் கொண்டான். அவன் முகத்தையே பார்த்து இருந்த பெரியவர்கள், சிறிது நேரத்தில், அவன் அறையை விட்டு வெளியேறினார். அவனது மூளையின் சிந்தனை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளியவன், எதிரில் இருந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரம் கழித்து, அவனது அறையின் கதவை திறந்துகொண்டு, மணியன் பெரிய ஆச்சி வந்தாள். மணியைப் பார்த்து சிரித்தவள், எதுவும் பேசாமல், அவனுக்கு அருகில் படுத்து, ஒருக்களித்துப் படுத்திருந்த அவள் முதுகை பார்த்தவாறு, அவன் கையை தடவ ஆரம்பித்தாள்.

"கண்டதை யோசிக்காத கண்ணு!!, கண்ண மூடிட்டு தூங்கு!!" என்றவள், அவன் தலை முடிகளை கோத ஆரம்பித்தாள்.

மணியின் சிறுவயது பழக்கம், தலைமுடியை கோத ஆரம்பித்த, இரண்டு நிமிடத்தில், தூங்கி விடுவான. அதுவரை வெறுமையாக இருந்த மணியின் மனதில், இந்த டெண்ணிஸ் மட்டும் ஆடாமல் இருந்திருந்தால், தாத்தா, அச்சிக்களின் பேரனாக, சந்தோஷமாக இருந்திருப்பேனோ? என்று கேள்வி ஏழ, தலையைத் தடவிக் கொண்டிருந்த கையை எடுத்து, தன் மார்போடு வைத்துக்கொண்டான். மணி, அப்படி செய்ததும், இன்னும் கொஞ்சம் நெருங்கிப் படுத்துக் கொண்டவள், சிறு குழந்தைக்கு தட்டிக் கொடுப்பதைப் போல, அவன் மார்பில் தட்டிக் கொடுத்தாள், கண்களை மூடினான். கண்களை மூடி இருந்தானே தவிர, இரவெல்லாம் விழித்தே இருந்தான். மனதில் ஒரே எண்ணம், தான் டென்னிஸ் விளையாடி இருக்க கூடாதோ? மதுவையும் வெறுக்க முடியாதவன், அவளை, தன் வாழ்வில் கொண்டுவந்த டென்னிஸை வெறுத்தான், முதல் முறையாக. கண் திறந்தவன், கடிக்காரத்தைப் பார்த்தான், காலை ஐந்து மணி என்று காட்டியது. எழுந்து, காலை கடன்களை முடித்துவிட்டு, வந்தவனின் கண்களில், தூங்கிக்கொண்டிருந்த அவனது பெரியாச்சி பட்டாள். அலுங்காமல், தூங்கும் அவளை, ஒரு பத்து வினாடி பார்த்துக்கொண்டிருந்தவன் உதடுகளில், லேசான புன்னகை. விலகியிருந்த போர்வையை எடுத்து, அவள் மார்புவரை போர்த்தியவன், அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

*************

ஒரு மணி நேரம் கழித்து,

தூரத்தில் தெரிந்த, பழனி முருகன் கோயிலை, பார்த்துக் கொண்டிருந்தான், மாடியில் அமைதியாக அமர்ந்தவாறு . கீழே வீட்டிலிருந்து வந்த கூக்குரல், அவன், எண்ணமற்ற எண்ணத்தைக் கலைத்தது. கீழே வந்தவன் காதுகளில், அந்த கூக்குரல், அழுகை சத்தமாக மாறியது, அதுவும் அவனது அறையில் இருந்து. ஒளித்து வைத்திருந்த, தூக்க மாத்திரையை பெரியாச்சி பார்த்து விட்டாளோ? என்ற எண்ணம் எழ, தனது முட்டாள்தனத்தை கடிந்து கொண்டவன், சரி சமாளித்துக் கொள்வோம், என்று நினைத்து, நிதானமாக அவனது அறையில் நுழைந்தான். உள்ளே நுழைந்தவன் கண்ட காட்சியில், அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டான். சுமாவும், சின்ன அச்சியும், அழுது கொண்டிருக்க, நிரந்தரமாய் தூங்கியவளுக்குத் தான் போர்வையைப் போர்த்திவிட்டு சென்றிருந்தான், மணி. மெதுவாக சென்றவன், அப்படியே அவளது கால் மாட்டில் அமர்ந்தான். மது அவனது வாழ்வில் இருந்து சென்றதில் இருந்து எங்கே? எங்கே? என்று அவன் தேடித் திரிந்த சாவு, அவன் எதிரில் நின்ற போது, எதுவும் செய்ய முடியாமல் உறைந்து போனான். மணியைப் பார்த்ததும், ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டு அழுதாள், சுமா. அவனை அணைத்துக்கொண்டு அழுதவள், அவனை இழுத்துச் சென்று, அவனைக் காட்டி ஒப்பாரி வைத்தாள், தன் மாமியாரிடம். கட்டிலின் ஓரத்தில், இரவு தன்னை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவளின், காலை பிடித்தவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.

*************

தன்னை யாரோ தொட்டு உலுக்க, நல்ல தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டதைப் போல் மலங்க, மலங்க, விழித்தான், மணி.

"இந்த ஜூஸையாவது குடி கண்ணு!!" அவன் அருகில் அமர்ந்தவாறு, சின்ன ஆச்சி, அவனை நோக்கி கிலாஸை நீட்டினாள். வேண்டாம் என்று தலையசைத்தான். ஜூஸ் இருந்த கிளாசை கீழே வைத்தவள்,&

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here