கட்டிலின் ஓரத்தில், இரவு தன்னை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவளின், காலை பிடித்தவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.

*************

தன்னை யாரோ தொட்டு உலுக்க, நல்ல தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டதைப் போல் மலங்க, மலங்க, விழித்தான், மணி.

"இந்த ஜூஸையாவது குடி கண்ணு!!" அவன் அருகில் அமர்ந்தவாறு, சின்ன ஆச்சி, அவனை நோக்கி கிலாஸை நீட்டினாள். வேண்டாம் என்று தலையசைத்தான். ஜூஸ் இருந்த கிளாசை கீழே வைத்தவள், அழ ஆரம்பித்தாள். மீண்டும் தன் பார்வையை, புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்த பெரிய ஆச்சியின் மீது வைத்தான், மணி. மாலையிட்டு அதன் முன்னே, ஒரு சின்ன தீபம் ஏற்றப்பட்டிருந்தது.

"வாய்விட்டு அழுதுறு கண்ணு!!" என்றபடி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

சுமாவின் அழுகையும், கூடச் சேர்ந்து கொண்டது. ஜூஸ் எடுத்து ஒரே மூச்சாக குடித்தான். அழுகையின் தூண்டுதலாலா? அல்லது பசியின் தூண்டுதலாலா? என்பதை, அவன் மட்டுமே அறிவான். எழுந்தவன், நேராக அவன் அறைக்குச் சென்றான். பின்னாலேயே எழுந்து, சின்ன ஆச்சியிடம், பாத்ரூம் போவதாக சொல்ல, எழுந்தவள், அப்படியே அமர்ந்து விட்டாள். அவனது அறையின், பாத்ரூம் கதவின் முன்னால், சில நிமிடம் நின்றுவன், அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தான். நிமிர்ந்து பார்த்தவன் கண்ணில், எதிரே இருந்த கண்ணாடியில் அவன் பிம்பம் தெரிந்து. அவன், இதுவரை பார்த்திராத, தலை, தாடி, மீசை என்று மொத்தமும் ரோமமும் மழிக்கப்பட்டு, மொட்டையாக இருந்தான். உடல்நிலை மோசமாக இருக்க, பெற்ற தாய்கு கொள்ளி வைக்கக்கூட, கொடுத்து வைக்கவில்லை, சிவகுருவுக்கு. தாய்க்கு தலைமகன் கொள்ளி வைப்பது, அவர்களது வழக்கம். தலைமகனே திரும்பப் பிறந்துவிட்டான் என்று அவள் ஆயிரமாயிரம் முறை சொன்னதை, கொள்ளி வைத்து மெய்ப்பித்தான். கையில் மட்டும் பெயருக்கு முடியை எடுத்தால் போதும் என்று எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாய் மறுத்து மொட்டை அடித்தான்.

கண்ணாடியில் இருந்து பார்வையை அகற்றியவன் கண்ணில் நேற்று அவலுடன் உறங்கிய, மெத்தையில் நின்றது. அவள் இன்னும் படுத்து இருப்பது போலவே, தோன்றியது அவனுக்கு. அதுவரை வெறுமையாய் இருந்தவன் மனதில் அழுத்தம் கூடியது. மூச்சுத் திணறி கஷ்டப்பட்டு இருப்பாளோ? நெஞ்சு வலியால் துடித்து இருப்பாளோ? என்று அவன் மனது அலைபாய, சுருக்கென்ற வழியை புஜத்தில் உணர்ந்தான். சாகப் போகிறோம் என்று தெரிந்துதான், நேற்று என்னுடன் வந்து படுத்தாளோ? இல்லை, நான் சாவதை தடுப்பதற்கு தான், அவள் உயிரை விட்டாளோ? என்ற எண்ணம் வர, வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது, அவனுக்கு. முயற்சித்தான், முடியவில்லை. நான் இருக்கிறேன்!! நான் இருக்கிறேன்!! என்று அவனை தேற்ற முயன்ற போதெல்லாம் விரட்டி அடித்தவனை, நேரம் பார்த்து பழி வாங்கியது, கண்ணீர். அவளிடம் முகம்கொடுத்து, கனிவாக இரண்டு வார்த்தைகள் பேசி இருக்கலாமோ!! சிறுவயதில் படுத்ததைப்போல, அவள் மடியில் கடைசியாக ஒருமுறை தலை வைத்துப் படுத்திருக்கலாமோ!! என்று அவன் மனதில் சீரற்ற எண்ணங்கள் தோன்ற, தொளில் ஆரம்பித்த வலி, அவன் நெஞ்சை நோக்கி படர்ந்தது. இதயத்தின் துடிப்பு, அவன் காதுகளுக்கு கேட்டது, மூச்சு முட்டியது, "மாத்திரை" என்றது அவன் மூளை. எழுந்துவனின் கண்கள் இருட்டிக்கொண்டு வர, அப்படியே மூர்ச்சையாகி, விழுந்தான். உள்ளுணர்வோ? தாய்மையின் உணர்வோ?, அவனைத் தேடிவந்த சுமா, கீழே குப்புற விழுந்து கிடந்த, மகனைப் பார்த்ததும், அவள் அடிவயிற்றில் இருந்து கிளம்பிய அலறலில், அடுத்த பத்து நொடியில், அந்த வீட்டில் இருந்த அத்தனை உயிர்களும், அந்த அறையில் இருந்தது.

************

மறுநாள்

விழித்தபோது கோயம்புத்தூரில், ஹாஸ்பிடலில் இருந்தான். இறந்தவளோடு சேர்த்து, இவனுக்காகவும் கண்ணீர்விட்டது, மிஞ்சி இருந்த மூன்று ஜீவன்களும். ஏகப்பட்ட பரிசோதனையின் முடிவில், ஒன்றுமில்லை என்று சொல்லப்பட, ஏற்கும் மனநிலையில் இல்லாவிட்டாலும், கொஞ்சம் நிம்மதி அடைந்தது மூவரின் மனதும்.

*************

மறுநாள்

தாத்தாவின் திருப்திக்காக, மீண்டும் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாலையில், வீட்டுக்கு செல்வது என்று முடிவெடுத்திருந்தார்கள்.

"சாரி டா!!, இன்னைக்கு காலைலதான் கேள்விப்பட்டேன்!!" பதினோரு மணி அளவில், செய்தி கேள்விப்பட்டு, மணியை மருத்துவமனையில் பார்க்க வந்திருந்த பிரதீப், அவன் கையைப் பிடித்துக் கொண்டு, துக்கம் விசாரித்தான்.

மணி, தலையை மட்டும் ஆட்டினான். அருகிலேயே தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள், நேத்ரா. இரண்டுநாள் முன்பு "சாவிற்கு மாலை போடலாம்!!" என்று பேசியவள், இப்பொழுது அதற்காக வருத்தப்பட்டாள்.

"என்ன ஆச்சு டா!!, வெளியே ஹார்ட் அட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here