மணி, தலையை மட்டும் ஆட்டினான். அருகிலேயே தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள், நேத்ரா. இரண்டுநாள் முன்பு "சாவிற்கு மாலை போடலாம்!!" என்று பேசியவள், இப்பொழுது அதற்காக வருத்தப்பட்டாள்.

"என்ன ஆச்சு டா!!, வெளியே ஹார்ட் அட்டாக்னு பேசிக்கிறாங்க?" மணியின் உடல் நிலையை விசாரித்தான், பிரதீப். மறுப்பாக தலையசைத்தான் மணி.

"சாரி டா!!" நேத்ராவின், முறையானது. விரக்தியாக சிரித்தவன்.

"எனக்கு ஒன்னும் இல்ல!!, வலது பக்கம் தான் வலி!!. Muscle strainனு டாக்டர் சொல்றாங்க, அந்த பைக் ஆக்சிடென்டோட யெஃபேக்ட்!!" கொஞ்சம் தெளிவாக இருந்தான், மணி.

***************

மறுத்துப் பேச விடாமல், தன் ஆச்சிக்கான, ஏழாம் நாள் காரியத்தில், செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தான், மணி. அன்று இரவு, பழனி வீட்டின் ஹாலில் அமர்ந்து இருக்க, நிரந்தரமான வெற்றிடம் உருவாகியிருந்ததை உணர்ந்திருந்தான், மணி.

"நீங்களும் கோயம்புத்தூர் வந்துருங்க தாத்தா!!" என்றவன், அவர் மடியில் தலைவைத்து படுத்தான்அவரால் மருக்கமுடியாவில்லை.

****************

"சார், ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் ஃபைலிங் பண்றதுக்கு, இன்னும் பத்து நாள் தான் இருக்கு!!" என்றபடி, சில பேப்பர்களை நீட்டினார் சங்கரபாணி.

பத்து நாள் கழித்து, முதல்முதலாக இன்றுதான் அலுவலகம் வந்திருந்தான், மணி. அவர் கொடுத்த பேப்பர்களை வாங்கிப் புரட்டிக் கொண்டிருந்தான். கடந்த மாதம் கையகப்படுத்திய அவினாஷ் தாக்கரின் நிறுவனத்தை, தங்கள் நிறுவனத்துடன் இணைத்து, பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரம் அது. பதினைந்து நிமிட சிந்தனைக்குப் பின், அதில் சில திருத்தங்களை செய்தவன்,

"அவரோட கம்பெனி 20 பெர்செண்ட் ஈக்வாலான ஸ்டாக்க, அவருக்கு ஆஃபர் பண்ணுங்க. அவர் ஓகேன்னு சொன்னா, அவர்ட நான் பேசனும்னு சொன்னேனு சொல்லுங்க!!" திருத்தம் செய்த பேப்பர்களை, அவரை நோக்கி நீட்டிவன், அலுவலகத்தை விட்டு கிளம்பினான்.

அவனது மனதில், தான் செய்வது சரியா? தவறா? என்ற குழப்பம். கடந்த நான்கு வருடங்களில், இது போன்று குழப்பமான, மனம் சஞ்சலப்படும் நேரங்களில், செய்வதைப் போல, அந்த நீலகிரி மலையின் கிழக்குச் சரிவில், இறங்கி கொண்டிருந்தான். மலை இறங்குவது, சில நாட்களுக்கு முன்பு இருந்ததைப் போல அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் பெய்த மழையின் சாட்சியாக, ஆங்காங்கே நீர் ஊற்று வழிந்து கொண்டிருந்தது, பாறைகளின் இடுக்கில். முதல் முறையாக இறங்கும்போது ஏழு மணி நேரம் எடுத்துக் கொண்டவன், இப்பொழுதெல்லாம் மூன்று மணி நேரங்களுக்குள் இறங்கி விடுகிறான். மலையின் அடிவாரத்தில் இருந்த காட்டாறை நெருங்கிய பொழுது, இருட்ட ஆரம்பித்திருந்தது. அந்த ஆற்றின் கரையில் அமர்ந்தவன், ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் பார்வையைப் பதித்தான். கடந்த முறை அடித்துச் செல்லப்பட்ட போது, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு, ஓடிய தண்ணீர், கொஞ்சம் குறைந்திருந்தது. ஆனால் நீரில் இழுப்பு குறைய வில்லை என்றே தோன்றியது. எழுந்தவன், அந்த ஆற்றைக் கடப்பதற்கான ஏதுவான இடம் தேடி, நடந்தான். பாறைகளுக்கு இடையே ஓடும் பொழுது சலசலத்து நதியின் சத்தம் இல்லாத, இடத்தில் நின்றவனுக்கு, நீந்திக் கடப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்று தோன்றியது. மறு கரையை ஆராய்ந்தான், யோசிக்காமல் தண்ணீரில் குதித்துவன், ஆற்றின் போக்கிற்கு குறுக்காக, நீந்த ஆரம்பித்தான். நீண்ட போராட்டத்திற்குப் பின் கரையேறியவனக்கு, கை, கால்கள் எல்லாம் வலித்தது. கரையின், அருகில் இருந்த பாறையில் அமர்ந்தவன் மனதில், இந்த முறை உன்னை வென்று விட்டேன் என்றான், ஓடிக் கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்து. அவன் மனதில் இருந்த குழப்பம் அனைத்தையும், அந்த ஆற்றின் நீர் இழுப்பு, கரைத்து சென்றது.

அன்று இரவு,

"தாத்தா, எக்ஸிக்யூடிவ் பவர்ஸ் எல்லாம் கொடுத்துடலாம் இருக்கேன்!!" இரண்டு வருடங்களில் முதல் முறையாக தாத்தாவிடம் தொழில் சம்பந்தமாக பேசினான்.

காலையில் சென்றவன், இரவு வரும்வரை, மூவரும் தவித்து போயிருந்தனர். மணி வேலையை பற்றி பேசத் துவங்கியதும், தாத்தாவின் மனம் நிம்மதி கொண்டது, ஆமோதிப்பாக தலையசைத்தார். அதுவரை, தனது முழு நேரத்தையும், சக்தியையும் தொழிலிலேயே காட்டி வந்தவனுக்கு, சற்று ஓய்வு தேவை என்று தோன்றியது. தனக்காகவே வாழ்ந்து வரும் தாத்தா, ஆச்சியிடம் பாசத்தோடு, கொஞ்சம் கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று மனது சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல், ஒதுக்கித்தள்ளி இருந்தான். அதுவும் இல்லாமல், தனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், தொழிலில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்தவன், அதற்காகத்தான் இன்று காலை அதற்கான முதல் புள்ளியை வைத்து இருந்தான்.

மீட்சிக்கு வழியே இல்லா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here