அதுவரை, தனது முழு நேரத்தையும், சக்தியையும் தொழிலிலேயே காட்டி வந்தவனுக்கு, சற்று ஓய்வு தேவை என்று தோன்றியது. தனக்காகவே வாழ்ந்து வரும் தாத்தா, ஆச்சியிடம் பாசத்தோடு, கொஞ்சம் கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று மனது சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல், ஒதுக்கித்தள்ளி இருந்தான். அதுவும் இல்லாமல், தனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், தொழிலில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்தவன், அதற்காகத்தான் இன்று காலை அதற்கான முதல் புள்ளியை வைத்து இருந்தான்.

மீட்சிக்கு வழியே இல்லாத ஒரே இழப்பு, இறப்புதான், என்பதை அவனது ஆச்சி அவனுக்கு உணர்த்திவிட்டிருந்தாள். ஒரு இழப்பில் தன்னைத் தொலைத்தவன், இன்னொரு இழப்பில் தன்னை மீட்க முனைந்தான்.
*************

P. S

கரையிலிருந்து பார்ப்பவனுக்கு, கடல் மட்டமானதாக, தட்டையானதாக தெரியலாம். ஆனால், அது உண்மையில்லை, என்பதை நாம் அனைவரும், அறிவோம். அருகில் இருந்தபொழுது மணியை விலக, மதுவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும், அவன் எப்பொழுதும் தன்னவனாக இருப்பான் என்ற நம்பிக்கையே, அவனை விலகும் உறுதியைக் கொடுத்து. அந்த நம்பிக்கையில், தான் கசிந்துருகி, காதலித்த மணி, தன்னைக் கண்டதும் தன்னிடம் ஓடி வந்து விடுவான் என்று நினைத்தவளுக்கு, அவனிடம், இப்படி ஒரு முகம் இருக்கும், என்பதை உணர்ந்த பொழுது, உடைந்து போனாள். அதைப் போலத்தான் வாழ்க்கையும். சில உறவுகளிடம் இருந்து விலகியும், சில உறவுகளுடன் எப்போதும் இணைந்தே இருப்பது தான், அந்த உறவை பாதுகாக்கும். இரண்டு புள்ளிகளுக்கு இடையே ஆன குறைந்தபட்ச தூரம் என்பது நேர்கோடு தான்.

And in nature "There are no straight lines". ஒன்றரை வருடம் கழித்து,

டெல்லியில் ஒரு புகழ் பெற்ற நட்சத்திர விடுதியின், சூட்டு அறையில் அமர்ந்திருந்தான், மணி. கண்ணாடியில் தெரிந்த, அவன் கண்களின் பிரதிபலிப்பில் பார்வையைத் பதித்திருந்தான். அந்தக் கண்கள் சோர்வுற்று இருந்தது, அதே நேரத்தில், ஒன்றரை வருடமாக, கட்டுக்குள் வைத்திருந்த மிருகம், உன்னை வென்றே தீர்வேன் என்றது. இன்னும் அது, தன் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. அறையின் கதவு தட்டப்படும் ஓசை, அவனை, அந்த மிருகத்திடம் இருந்தும், சோர்விடம் இருந்தும், மீட்டெடுத்தது.

"சார்!! இன்னும் அரை மணி நேரத்துல ஸ்டார்ட் ஆயிடும்!!" அறையின் கதவை திறந்ததும், அவனது உதவியாளர் சொல்ல, தலையசைத்த மணி, வரவேற்பறையில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தான்.

"இந்திய வர்த்தகத்தின் இளம் நட்சத்திரங்கள்!!" என்ற தலைப்பில் இந்தியாவின் பிரபலமான ஊடகம் நடத்திய கலந்தாய்வில் கலந்து கொள்ளவே, டெல்லி வந்திருந்தான். அதுவரை ஊடகங்களில் முகம் காட்டாதவன், சில அரசியல், தொழில் நிர்பந்தங்களை சமாளிப்பதற்காக தான், அந்த நிகழ்சிச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டான். அவனோடு சேர்த்து, இன்னும் மூன்று இளம் தொழிலதிபர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அந்த மூவரின் சம்பந்தமான குறிப்புகளை, மீண்டும் ஒருமுறை வாசித்துக் கொண்டிருந்தான். அந்த நிகழ்வை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர், போட்டு வாங்குவதில் வல்லவர். அந்த தொகுப்பாளரை பற்றிய குறிப்புகளை, அவன் வாசித்துக் கொண்டிருக்க

"சார்!! அவருக்கு உங்கள ஒரு கெஸ்ட்டா இந்த புரோகிராம்ல கூப்பிட்டது பிடிக்கலையாம். கண்டிப்பா, எதாவது குதர்க்கமா கேட்பார்!!" கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு, அவனை ஆயத்தப்படுத்தி கொள்ள உதவும் குழுவில் இருந்த ஒருவர் சொன்னார். நிமிர்ந்து அவரை பார்த்தவன்,

"அவருக்கு நம்மள புடிக்கலனா!!, அதுக்கு, நாம எதுவும் பண்ண முடியாது!!" சிரித்தான்.

இதுவே ஒன்றரை வருடங்களுக்கு முன்னால், இப்படி ஒரு சூழ்நிலை அமைந்திருந்தால், அந்த தொகுப்பாளரை, நிகழ்ச்சி முடியும்முன் மண்டியிட வைக்க வேண்டும், என்பதுதான் அவனது ஒரே சிந்தனையாக இருந்திருக்கும். தொழிலில், அவனை நிலைநாட்டிக் கொள்ள அவனுக்கு பெரிதும் உதவியது, இப்படி எதிரே நிற்பவர்களை மண்டியிட வைக்கும், பவர் கேம்தான். அதை, இன்னும் அவன், முழுதாக உதறித் தள்ளி விட்டாலும், அதை யாரிடம்? எப்போது? எதற்காக? உபயோகப்படுத்த வேண்டும் என்ற பக்குவத்தை, கடந்த ஒன்றரை வருட வாழ்க்கை, அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. அவனைப் பக்குவப்படுத்திய சில நிகழ்வுகள்

*************

மணியின், பெரிய ஆச்சி இறந்த, ஒரு மாதம் கழித்து,

சாப்பிட்டும், சாப்பிடாமலும் எழுந்து சென்றாள், சுமா. எழுந்து சென்ற, தாயைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகத்தில் ஒரு தவிப்பு, வேதனை.

"கொஞ்சம் வெளிய போலாமா?" சுமாவின் பின்னாலேயே எழுந்து, கை கழுவச் சென்றவன், சுமாவைப் பார்த்து கேட்க, அவனது அருக்காமைக்காக, கனிவான பார்வைக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here