எழுந்து சென்ற, தாயைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகத்தில் ஒரு தவிப்பு, வேதனை.

"கொஞ்சம் வெளிய போலாமா?" சுமாவின் பின்னாலேயே எழுந்து, கை கழுவச் சென்றவன், சுமாவைப் பார்த்து கேட்க, அவனது அருக்காமைக்காக, கனிவான பார்வைக்காக, ஒரு சொல்லுக்காக, இரண்டு வருடமாக எங்கித் தவித்தவள் அல்லாவா, சரி என்று அவசர அவசரமாக தலையாட்டினாள்.

உடை மாற்றவில்லை, அலங்காரத்தை சரி பார்க்கவில்லை, மகன் அழைத்ததும், அவன் பின்னால், சென்றாள். அரைமணி நேரத்தில், அவர்கள் பயணித்த கார், கோவையின் அப்போலோ மருத்துவமனையில் நின்று கொண்டிருந்தது.

"இறங்குங்க!!" என்ற மகனை, நம்ப முடியாமல் பார்த்தாள், சுமா.

தன் அம்மாவை காரிலிருந்து அழைத்துக்கொண்டு, அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான். சிறிது நேரத்தில் ஒரு அறையின் முன்னால் நின்றவன், தனது தாயைப் பார்த்து திரும்பி, உள்ளே போகும்படி கண் காட்டினான். அவள் தயங்கி நிற்க, கதவைத் திறந்த மணி, தன் தாயின் கைபற்றி உள்ளே அழைத்து சென்றான். தாயின், இறப்பிற்கு பிறகு சிவகுருவின் உடல்நிலை, மேலும் மோசமடைந்து. அன்று காலைதான் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார். மணியின் தாத்தாவும், ஆச்சியும் செய்தி கேள்விப்பட்டு காலையிலேயே மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்த சிவகுருவை, ஒரு நொடி பார்த்தவன், பின் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். பெரியவர்கள் இருவரும் சென்று இருக்க, சுமா மட்டும் அரை மனதுடன் தவிர்த்திருந்தால். தன் கணவன் மீதான கோபம் குறைந்திருந்தாலும், சிவகுருவால் ஏற்பட்ட காயத்தின் வலி, அவளுக்கு தயக்கத்தை கொடுத்தது. தன் அன்னையின் தவிப்பும், வேதனையும், ஏனோ மணிக்கு, மதுவை நினைவுபடுத்தியது. தனது உறுதியை கொஞ்சம் தளர்த்தினான், தன் அம்மாவிற்காக. தனக்காக, தன் தாய், தன்னை தண்டித்துக் கொள்வது குற்றஉணர்ச்சியைக் கொடுத்தது, மணிக்கு. அந்த குற்ற உணர்ச்சியில், பாசம் எங்கேனும் ஒளிந்திருந்ததா என்பதை அவன் மட்டுமே அறிவான்.

***********

ஒருவாரம் கழித்து.

குழப்பமான மன நிலையில் வீட்டிற்குள் நுழைந்தவன், ஹாலிலேயே அமர்ந்து விட்டான். கடந்த ஒரு வாரமாக, மருத்துவமனையில் இருந்த சிவகுருவை கவனித்துக் கொள்வதில் மூவரும் பிசியாக இருந்தனர். அவன் அம்மாவிடம் பேசிக் கொள்ளாமல் இருந்திருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில், சாப்பிடும் வேலைகளிலும், அவன் வீட்டில் இருக்கும் வேலைகளிலும், அவள் கவனமெல்லாம், அவன் மீதே இருந்தது. யாரிடமும் நெருங்கக் கூடாதென்று, அவனுக்கு அவனே வேலிதிடுக் கொண்டு வாழ்ந்து வந்தாலும், தன் அம்மாவின் அந்த கவனத்தை அவனது மனம் விரும்பியிருக்கிறது என்பதே, அவனுக்கு கடந்த ஒரு வாரமாக, அவள் அருகில் இல்லாத போது தான் புரிந்தது. எங்கே உடல்நலம் தேறி, சிவகுரு மீண்டும் கொடைக்கானல் எஸ்டேட் சென்றால், தன் கணவருடன், அவளும் சென்று விடுவாளோ? என்ற எண்ணம் வரும்போதெல்லாம், இப்படி குழம்பிப் போவான்.

அவனது மனம் தனித்து இயங்கி சோர்வடைந்து, ஆறுதலை, அன்பை எதிர்பார்க்கத் துவங்கியிருந்தது. வாழ்க்கையில், இப்படியான ஒரு சிக்கலில் தவித்து இருந்தான் என்றால், தன் திருத்தி அனுப்பிய டாக்குமென்ட்டை பற்றி, எந்த ஒரு பதிலும் சொல்லாமல், அவினாஷ் தாக்கர் அமைதி காத்தார். அப்படி ஒரு வாய்ப்பை, அவருக்கு தராமல் இருந்திருக்கலாம். அப்படித் தந்தப் பின், இருவருக்குமான பவர்கேம் தொடங்கியிருந்தது. பவர் கேமில், யார் மேலே? யார் கீழே? என்பதுதான் ஆட்டமே. முதல் காய் நகர்த்தலை இவன் துவங்கியிருக்க, எதிராளி இன்னும் அவர் காயை நகர்த்தி இருக்கவில்லை. தானே ஒருமுறை அவரிடம் அழைத்து பேசலாமா? என்ற எண்ணம், அவனை குழப்பத்துக்கு ஆளாக்கியது. தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும், அவினாஷ் தாக்கருக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியதும், முட்டாள்தனமான முடிவோ என்ற குழப்பத்தில் அமர்ந்திருந்தான்.

மருத்துவமனையில் இருந்து மூவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். தன் தாத்தாவிடம் சிவகுருவின் உடல்நிலை பற்றி விசாரித்தவன், அதற்காகத்தான் காத்திருந்தேன் என்று சொல்லிவிட்டு, அவனது அறைக்கு சென்று விட்டான். ஒரு மணி நேரம் கழித்து, அவனது அறையில் நுழைந்தாள் சுமா. கட்டிலில் அமர்ந்தவாறு புத்தகம் படித்துக் கொண்டு இருந்த மணி, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். என்ன என்பது போல் கேள்வியாய் பார்த்த மகனைப் பார்த்து, வலிந்து புன்னகையை உதடுகளில் படரவிட்டாள். மணியின் அருகே மெத்தையில் சென்று அவள் அமர, ஏதோ பேச விரும்புகிறாள் என்று உணர்ந்தவன், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அவள் பேசுவதற்காக காத்திருந்தான். கண்கள் நிலையில்லாமல் அங்குமிங்கும் அலைபாய, 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here