ஒரு மணி நேரம் கழித்து, அவனது அறையில் நுழைந்தாள் சுமா. கட்டிலில் அமர்ந்தவாறு புத்தகம் படித்துக் கொண்டு இருந்த மணி, நிமிர்ந்து அவளைப் பார்த்தான். என்ன என்பது போல் கேள்வியாய் பார்த்த மகனைப் பார்த்து, வலிந்து புன்னகையை உதடுகளில் படரவிட்டாள். மணியின் அருகே மெத்தையில் சென்று அவள் அமர, ஏதோ பேச விரும்புகிறாள் என்று உணர்ந்தவன், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அவள் பேசுவதற்காக காத்திருந்தான். கண்கள் நிலையில்லாமல் அங்குமிங்கும் அலைபாய, மணிக்கு அவளது மனம் புரிந்தது. அவள் கேட்க தயங்குகிறாள், நாமே சொல்லிவிடலாம் என்று மணி நினைத்துக்கொண்டிருக்கும் போது, அவன் எதிர்பாராத விதமாக, அவனது மடியில் தலைவைத்து படுத்தாள், சுமா. அவளது ஒரு கையை பற்றியவள், அதை இழுத்து தன் முகத்தின் கீழே வைத்துக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர், அவனது நைட் பேன்ட்டை ஈரமாக்கியது.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போனான். அவளது மடியில் இப்படித் தலை வைத்து உறங்க, எவ்வளவு நாள் ஏங்கி இருக்கிறான். இப்போது, கடந்த இரண்டு நாட்களாக கூட, எங்கே அவளது அருகாமையை இழந்து விடுவோமோ? என்று ஏங்கிக் கொண்டிருந்தவனின் மடியில், படுத்துக்கொண்டு, அவன் அம்மா சத்தமில்லாமல் அழ, ஒருசாய்ந்து படுத்திருந்தவளின் கையைத் தட்டிக் கொடுத்தான். அவன், ஏங்கி தவித்த போது, அவளிடம் இருந்து அவனுக்கு கிடைக்காத அரவணைப்பை, அவள் ஏங்கித் தவித்த போது, ஏனோ அவனால் மறுக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன் மதுவை ஞாபகப்படுத்தியவள், இன்று ஏனோ, அவனையே, அவனுக்கு ஞாபகப்படுத்தினாள்.

*************

இரண்டு நாள் கழித்து, அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் மணி.

அவனது டேபிளில் இருந்த தொலைபேசி அடித்தது, எடுத்து காதுக்கு கொடுக்க

"சார்!! அவினாஷ் தாக்கர், லைன்ல இருக்கார்!!" ஏன்று செய்தி சொல்லப் பட, அந்த தொலைபேசி அழைப்பு இணைக்கப்பட்டது.

இரண்டு நாள் அவரின் அழைப்புக்காக காத்திருந்தவன், தானே அவரை அழைத்து பேசுவது என்று முடிவு செய்து, அவரை இணைப்பில் எடுக்க கூறியிருந்தான்.

"Mr.தாக்கார்!! நீங்க என்ன பாஸ்டர்ட்னு சொல்லியிருக்க கூடாது!!" வழக்கமான குசல விசாரிப்புகள் எதுவுமின்றி, நேரடியாக காரியத்தில் இறங்கினான்.

"சோ வாட்?" அவரும் தயாராகவே இருந்தார்.

"அந்த வார்த்தையை நீங்க திரும்ப எடுத்துக்கிட்டா நல்லது!!" ஆரம்பம் ஆனாது.

"முடியாது!! நான் சரியாத்தான் சொன்னேன்!!" விட்டுக்கொடுப்பதாய் இல்லை, வாங்கிய அடியின் வீரியம் அப்படி.

"Mr. தாக்கர் சார்!! நான் உங்கள, ஒரு பெரிய பிசினஸ்மேன்னு நம்பிகிட்டு இருக்கேன்!! அந்த நம்பிக்கை தப்புன்னு தோணுது!!" சீண்டினான்

"உனக்கு என்ன வேணும்!!" நேராக விஷயத்துக்கு வந்தார்.

"எனக்கு ஒன்னும் வேண்டாம் Mr. தாக்கர்!!, உங்களுக்கு தான் ஒன்னு குடுக்கலாம்னு இருக்கேன்!!" என்றவன், பேச்சில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தினான்.

"…..………." மறுபுறம் அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, இப்பொழுது அவர் தனது பேச்சைக் கேட்பதற்கு தயாராக இருக்கிறார் என்று புரிந்து மணிக்கு,

"டீல் இதுதான்!! ஃப்யூச்சர் குரூப்ஸ், போர்டுல மெம்பர் ஆகுறதுக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு!! நீங்க பண்ண வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னு தான்!! அந்த வார்த்தைய திரும்ப வாங்கிக்கணும்!! அன்ட், அந்த 20% ஆஃபர்க்கும், இதுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை!!" என்று சொல்லிவன், காதுகளை கூர்மையாக்கினான், சில நிமிட அமைதிக்குப் பின்

"You are a blood sniffing wolf!!" என்றவர் சிரித்தார். மணியும் சிரித்தான்.

"நேர்ல மீட் பண்ணலாமா?"

"சூர்!!"

பேரம் படிந்த நிறைவு இருவரின் குரலிலும். நீயா? நானா? என்று இருக்கும் வரைதான் பவர் கேம்மின் விதிகள் பொருந்தும். அடித்து வீழ்த்தி வெற்றி பெற்ற பின், வெற்றி பெற்றவன் இறங்கி இறங்கி வந்து, வீழ்த்தியவனை கை தூக்கி விடுவது, விழுந்தவன் தனகிக்கெதிரே நிற்பதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து, வெற்றியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமல்லாது, விழ்த்தியவனை தன்னோடு இணைத்துக் கொண்டு, தன் பலத்தையும் பெருக்கலாம். அவனது அம்மா, அவன் மடியில் படுத்து அழுதபோது, வாழ்க்கை அவனுக்குக் கற்றுத் தந்த பாடம், இன்று தாக்கரே தன்வசம் ஈர்த்துக்கொள்ள உதவியது.

***********

ஒரு மாதம் கழித்து,

அப்போதுதான் ஒரு மீட்டிங்கை முடித்துக்கொண்டு, மணி, அவனது அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

"சார்!! உங்கள பாக்குறதுக்கு நேத்ரானு ஒருத்தங்க வந்திருக்காங்க!! கண்டிப்பா பாக்கணுமாம், உங்க பிரண்டுனு சொல்றாங்க!!" அவனைப் பின் தொடர்ந்து உள்ளே வந்த, அவனது உதவியாளர் சொல்ல, சிறுது நேரம் யோசித்தவன்

"வரச்சொல்லுங்க!!" என்றான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here