***********

ஒரு மாதம் கழித்து,

அப்போதுதான் ஒரு மீட்டிங்கை முடித்துக்கொண்டு, மணி, அவனது அலுவலக அறைக்குள் நுழைந்தான்.

"சார்!! உங்கள பாக்குறதுக்கு நேத்ரானு ஒருத்தங்க வந்திருக்காங்க!! கண்டிப்பா பாக்கணுமாம், உங்க பிரண்டுனு சொல்றாங்க!!" அவனைப் பின் தொடர்ந்து உள்ளே வந்த, அவனது உதவியாளர் சொல்ல, சிறுது நேரம் யோசித்தவன்

"வரச்சொல்லுங்க!!" என்றான்.

வரச்சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டானே ஒழிய, எதற்காக வந்திருக்கிறாள் என்று அலைபாய்ந்த அவனது மனம், படபடத்தது. தேவை இல்லாத எதையும் சிந்திக்க விடாமல் மனதை கட்டுப்படுத்திவன், நேத்ரா அறைக்குள் நுழைந்ததும், அவளைப் பார்த்து சிறிதாக சிரித்தான்.

"வா!! நேத்ரா!!" மன ஓட்டத்திற்கு மாறாக, அமைதியாக காணப்பட்டது அவனது முகம்.

"என்ன சாப்பிடுற?" நேத்ரா அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்ததும், மணி கேட்க, ஒன்னும் வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்.

அவளிடம் தென்பட்ட தயக்கம், மணியின் பதற்றத்தை மேலும் கூட்டியது. அதைக்காட்டிக் கொள்ளாமல் இருக்கவே, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவளுக்கு காபி ஆர்டர் செய்தான்.

"ஒரு சின்ன ஹெல்ப்!! ஆக்சுவலா பெரிய ஹெல்ப்!!" தயங்கியவாறே கூறினாள், நேத்ரா.

"எதா இருந்தாலும், தயங்காம சொல்லு!!" தைரியமூட்டினான், யாருக்கு என்று தெரியவில்லை.

"நான் வலுண்டீரா இருக்கிற NGOக்கு, கொஞ்சம் ஃபண்ட்ஸ் தேவைப்படுது, cochlear implants, இந்த பிறவியிலேயே காது கேட்காமல் போனா, குழந்தைகளுக்காக பண்ற சர்ஜரி……..!!"

"எஸ், தெரியும் எவ்வளவு வேணும்?" இடை மறித்தான் மணி. காசு தருகிறேன் அவன் சொன்னதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள், நேத்ரா.

"ஒரு சர்ஜரிக்கு 5 லட்சம் ஆகும்!! 30 குழந்தைங்க இருக்காங்க!!" அவளிடம் இருந்த தயக்கம் தணிந்தது.

தொலைபேசியில் அழைத்து யாருக்கோ பேசியவன், பின் அதை வைத்துவிட்டு

"இந்த வருசத்துக்கான CSR ஃபண்ட்ஸ் எல்லாம் ஸ்பெண்ட் பண்ணியாச்சு!!" என்று சொன்னவன், சிறிது நேரம் யோசித்து விட்டு,

"அதான், இந்த cochlear implants, தமிழ்நாடு கவர்மெண்ட் ஃப்ரீயா தான பண்ணி கொடுக்கிறாங்கல?" இலகுவாக சிந்திக்க ஆரம்பித்து இருந்தான், மணி.

"உண்மைதான், கவர்மெண்ட்ல இந்த வருஷம் கொடுத்த ஃபண்ட்ஸ் காலி ஆயிடுச்சு!!, இன்னும் நாலு மாசம் வெயிட் பண்ணனும்!!, பர்சனலா உன்னால எவ்வளவு முடியுமோ கொடு!!, நிறைய இடத்துல ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கோம்!!" நேத்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ட்ராவைத் திறந்து, காசோலையில் கையெழுத்திட்டு, அதைக் கிழித்து, அவளிடம் நீட்டினான்.

"தேங்க்யூ, சோ மச்!!" காசோலையில் இரண்டு கோடி என்று எழுதப்பட்டிருக்க, சிரித்துக்கொண்டே மணியை பார்த்து கூறினாள். நன்றி கூறியவளை பார்த்து சிரித்தான்.

"இரு, காபிய குடிசிட்டு கிளம்பு!!" காசோலையைப் பெற்றுக்கொண்டதும் கிளம்பியவளை பார்த்து மணி கூற, மறுக்க முடியாமல் அமர்ந்தாள்.

"சாரி டா!!" அந்த அறையில் சில நிமிடங்கள் நீடித்த அமைதியை கலைத்தாள், நேத்ரா.

"பரவால்ல!! அதெல்லாம் அப்போவே மறந்துட்டேன்!!" உதடுகள் விரிய புன்னகைத்தான். காபி வந்தது.

"சாரி டா, பானு திடீர்னு கல்யாணம் பண்ணிக்கப் போறேன் சொன்னவுடனே அவகிட்ட எவ்வளவு பேசிப் பார்த்தும், முடியலன்னு ஆனதுக்கு அப்புறம் தான் உன்னைத் தேடி வந்தேன்!! நீயும் அவளுக்கு மிச்சமா பேசினதால கோபத்துல தான், அப்படி பேசிட்டேன்!!" காபியை குடித்தவாறு தொடர்ந்தாள்.

"நீங்க ரெண்டு பேரும், இவ்வளவு பெரிய முட்டாளாக இருப்பீங்கன்னு நான் நினைக்கலே!!" மணி அறிந்த, பழைய நேத்ராவாய் மாறியிருந்தாள். அதற்கும் சிரிப்பையே பதிலாகத் தந்தான். காபியை குடித்துவிட்டு, டேபிளில் வைத்தவள்,

"நான் கிளம்புறேன்!!" விரக்தியாக, சிரித்தாள்.

"நேத்ரா!!………..” என்று நிறுத்தியவன், பின் தொடர்ந்தான்.

"முட்டாள்தனமும், புத்திசாலித்தனமும், வேற!! வேற!! இல்ல!! நாம ஒன்ன பேசும் போதோ, இல்ல ஒரு முடிவு எடுக்கும்போதோ!!, நம்ம அறிவுக்கு எட்டினவர சரின்னு பட்டதத்தான் செய்கிறோம்!!. அது முட்டாள்தனமா? புத்திசாலித்தனமாங்கிறத, காலம் தான் முடிவு பண்ணும்!!” கொஞ்சம் பெரிதாக சிரித்தான், மணி.

மணியின் புன்னகை நேத்ராவிடமும் தொற்றிக் கொண்டது. சிரித்தவாறே இடதும், வலதுமாக, தலையை ஆட்டினாள்.

"எனக்குத் தெரிஞ்ச மணி!!, ஒரு குழந்த பையன்!!, ரொம்ப நல்லவன்!! அவனுக்கு இப்படி தத்துவம் எல்லாம் பேச வராது" என்றவள், மீண்டும் இடதும் வலதுமாக தலையை அசைத்தாள்.

"அவனத்தான் நானும் தெடுறேன்!! கிடைச்சா சொல்லி விடுறேன்!!" என்று மணி சொல்ல, இருவரும் சிரித்தனர். பின், அவனிடம் இருந்து விடைபெற்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here