மணியின் புன்னகை நேத்ராவிடமும் தொற்றிக் கொண்டது. சிரித்தவாறே இடதும், வலதுமாக, தலையை ஆட்டினாள்.

"எனக்குத் தெரிஞ்ச மணி!!, ஒரு குழந்த பையன்!!, ரொம்ப நல்லவன்!! அவனுக்கு இப்படி தத்துவம் எல்லாம் பேச வராது" என்றவள், மீண்டும் இடதும் வலதுமாக தலையை அசைத்தாள்.

"அவனத்தான் நானும் தெடுறேன்!! கிடைச்சா சொல்லி விடுறேன்!!" என்று மணி சொல்ல, இருவரும் சிரித்தனர். பின், அவனிடம் இருந்து விடைபெற்று கிளம்பினாள் நேத்ரா. மணிக்கு மனதின் கணம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.

*****************

நான்கு மாதம் கழித்து,

திட்டமிட்டதைப் போலவே, கடந்த அறு மாதங்களில், தனது பணிச்சுமையை வெகுவாகக் குறைத்து இருந்தான், மணி. தங்கள் குழுமத்தின் எதிர்கால வளர்ச்சிகளின் பொருட்டு முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டு, அன்றாட நடவடிக்கைகளில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு இருந்தான். அதில் ஒரு அங்கமாக ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு, மீர் அலியை அழைத்திருந்தான். மணியின் அலுவலக அறைக்குள் நுழைந்தவர், வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்ததும்

"சார்!! உங்கள நம்ம R&D ஹெட்டா போடலாம்னு இருக்கேன்!!" நேராக விஷயத்துக்கு வரவும், அவரது முகத்தில், மணி எதிர்பார்த்த ஏமாற்றம் தெரிந்தது.

நான்கு நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட தங்களது குழுமத்தின் ஒவ்வொரு நிறுவனத்திற்கும், தனித்தனியாக CEOக்களை நியமிக்கும் முடிவின், கடைசி கட்ட காய் நகர்த்தலை செய்தான் மணி. ஃப்யூச்சர் பவர்ஸ்ஸின், CEOவாக ஆக்கப்டுவோம் என்று எதிர்பார்த்திருந்தார், மீர் அலி.

"CEO அவதற்கான, எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு!! நான் உங்கள முதன்முதல், எங்க காலேஜ்ல பார்த்த அந்த ப்ரொபோஸருக்கு, R&Dதான் புடிக்கும்னு எனக்கு தோணுச்சு!! இது என்னோட பர்சனல் விருப்பம்!!. இதுல ரெண்டு ஆப்பரும் இருக்கு!!, உங்களுக்கு என்ன விருப்பமோ அதை எடுத்துக்கலாம்!! You deserve it!!" என்றவன் அவரை CEO ஆக்குவதற்கான கடிதத்தையும், R&D ஹேட் ஆக்குவதற்கான கடிதத்தையும், அவரிடம் நீட்டினான். வாங்கிக் கொண்டவர், அவனைப் பார்த்து சிரித்தார்!! அவரின் முகத்தில், சிறிது நேரத்திற்கு முன் தெரிந்த ஏமாற்றம் சுத்தமாக இல்லை.

அவருக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுத்திருந்தாலும், மணிக்கு உண்மையிலேயே அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பைதான், கொடுத்திருந்தான். வாழ்க்கையில் அவன் அடைந்திருந்த பக்குவம், தொழில் விஷயத்திலும் அவனுக்கு நிறையவே கைகொடுத்தது.

தொடர்ச்சி…… ஒரு சனிக்கிழமை மாலை நேரம், ஒரு திருமண வரவேற்பில் அமர்ந்து இருந்தான்.

மேடையில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஜினாலி ஜெயின். அருகிலேயே, மறுநாள் அவளுக்கு கணவனாகப் போகும் மார்வாடி பையன். சற்றுமுன், பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டு, கிளம்பி விடலாம் என்று இருந்தவனை, முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று வலுக்கட்டாயமாக, காத்திருக்க சொல்லியிருந்தாள், ஜினாலி. மணி, மொபைலை நோண்டி கொண்டிருந்தான்.

"வெயிட் பண்ணதுக்கு தேங்க்ஸ்!!" என்ற ஜினாலியின் குரல் கேட்க, நிமிர்ந்து பார்த்தான்.

சிரித்துக்கண்டிருந்தாள், அருகிலேயே அவளது வருங்கால கணவனும். மணி, பதிலுக்கு இருவரையும் பார்த்து சிரித்தான்.

"இவர், யாருன்னு தெரியும்ல?" வருங்கால கணவனிடம் கேட்டாள், ஜினாலி. அவனும், தெரியும் என்பது போல் தலையசைத்தான்.

"சரி!! எனக்கு ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலி, மணியைப் பார்த்து, திடீர் என்று கூற ஆண்கள் இருவரும் திகைத்தனர்.

"வாட் இஸ் திஸ்?!!" ஆண்கள் இருவரும் ஒரே போல் குரல் எழுப்ப,

“வாட்?” என்று திருப்பிக்கக்கேட்டவள்,

"எனக்கு ரூட் போட!!, என் பின்னால கொஞ்சநாள் சுத்துன இல்ல?" வருங்கால கணவனின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல், மணியைப் பார்த்து சீரியஸாக கேட்டாள். மணி, ஆமோதிப்பாக தலையாட்டினான்.

"அப்ப ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலியின் சிரிப்பு கொடுத்த தைரியத்தில், அவளுக்கு ப்ரபோஸ் செய்தான், மணி. மணி புரோபோஸ் செய்ததும், தன் வருங்கால கணவனிடம் திரும்பிய ஜினாலி

"பாத்துக்க!! உனக்காக, இவன வேண்டாம்னு சொல்றேன்!! அதுக்கேத்த மாதிரி, என்ன பார்த்துக்கணும்!! பார்த்துக்குவியா?" அருகிலிருந்தவனை மிரட்டினாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு எளிருகள் தெரிய சிரித்தான், மணி.

"இப்ப சரின்னு சொல்லிட்டு!!, அப்புறம் ஏதாவது ப்ராப்ளம் பண்ணுன………" மீண்டும் மிரட்டியவள், மணியிடம் திரும்பி

"நான் எப்ப வந்தாலும் என்ன அக்சப்ட் பண்ணிப்ப!! இல்ல?" என்று கேட்க, சிரித்தவாறே அதற்கும் ஆமோதிப்பாக தலையாட்டினான், மணி. இருவரையும் மாறி மாறிப் பார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here