நீண்ட நாட்களுக்குப் பிறகு எளிருகள் தெரிய சிரித்தான், மணி.

"இப்ப சரின்னு சொல்லிட்டு!!, அப்புறம் ஏதாவது ப்ராப்ளம் பண்ணுன………" மீண்டும் மிரட்டியவள், மணியிடம் திரும்பி

"நான் எப்ப வந்தாலும் என்ன அக்சப்ட் பண்ணிப்ப!! இல்ல?" என்று கேட்க, சிரித்தவாறே அதற்கும் ஆமோதிப்பாக தலையாட்டினான், மணி. இருவரையும் மாறி மாறிப் பார்த்தான் மைதாமாவிடம் சிக்கி சீர் அழியப்போக்கும் அந்த அப்பாவி. சிரித்தவள், மணியிடம் தேங்க்ஸ் என்றாள். இருவரிடமும் கை கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினான், மணி. காரில் ஏறியதுமே, அவனது முகம் இருண்டது. அவன் முகத்தைப் பார்த்தவர்கள், சற்றுமுன் எளிருகள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

அரை மணி நேரம் கழித்து, ரெசிடென்சி ஹோட்டலின், அறை எண் 303ல், சோபாவில் அமர்ந்தவாறு, அருகில் இருந்த டேபிளில், அவனும், மதுவும், மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மனம் விட்டுச் சிரித்தால், நொடியே அவனது குற்ற உணர்ச்சியும், அவன் மனதின் ஏக்கமும், அவன் உயிரைப் பிடித்து குலுக்க ஆரம்பித்துவிடும். மது இல்லாமல் தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை, அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? அல்லது அவள் இல்லாத மகிழ்ச்சி உலகத்துக்காக அவன் போடும் வேடமா? என்பதை அவன் மட்டுமே அறிவான்.

*************

மணியின் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள்.

குலதெய்வம் கோவிலிலும், அவனது பெரியப்பாவின் சமாதியிலும், வணங்கிவிட்டு, பழனி வீட்டில் இருந்தனர், அனைவரும். எப்பொழுதும் தனது பெரியப்பாவின் சமாதிக்குச் சென்றால், தனியாக இருந்து விட்டுவரும், மணிக்கு, இன்று அப்படி இருக்க தோன்றவில்லை. மொபைலை எடுத்து, நோண்டிக்கொண்டிருந்தான். ஒரு மனிதனின், முழு வாழ்க்கைக்குமான அனுபவங்களை, கடந்த ஏழு வருடங்களில் அவனுக்கு கிடைத்து விட்டதைப் போல தோன்றியது, அவனுக்கு. முன்புபோல் மனம் அலைபாய வில்லை, ஒருவாராக, வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்து இருந்தான். இருந்தும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு, மதுவிடம் இருந்து ஒரு வாழ்த்து செய்தியோ? ஒரு அழைப்போ? வந்து விடாதா என்று. அப்படி வந்தால், அதன் பின் அவர்களுக்குள்ளான உறவு, எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம், அவன் யோசிக்க விரும்பவில்லை. தானே மதுவுக்கு அழைத்து பேசலாமா? என்றுகூட, ஒரு நொடி யோசித்து, பின் அந்த யோசனையை அரைநொடியில், நிராகரித்தான். அலைபேசியின் தொடுதிரையில், கழுத்தில் மாலையுடன், அவனும், மதுவும் இருக்கும் புகைப்படத்தை பார்த்தவனின் உதடுகளில், இதுபோதும் வாழ்க்கைக்கு என்பது போல், ஒரு திருப்தியான புன்னகை. கண்களை சில நொடிகள் மூடிமூச்சுவிட்டவன், மீண்டும் ஒருமுறை, அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தொடுதிரையை அனைத்து வைத்தான்.

அம்மா, தாத்தா, ஆச்சீ என்று மூவருடன், இரவு உணவை உண்டு முடித்தவன், சிறிது நேரம் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எழுந்து, அவனது அறைக்கு வந்தான். கட்டிலில் படுத்திருந்தவன் மனது முழுவதும், அவனது பதினெட்டாவது பிறந்தநாளின் நினைவுகள். அது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்த அதே அளவு ஏக்கத்தையும் கொடுத்தது, எதேனும் ஒரு அதிசியம் நிகழ்ந்து, காலையில் விழித்து எழும் பொழுது, மதுவை ஆனத்துக் கொண்டு, பதினெட்டு வயது மணியாக, ரெஸிடெனஸியின், அறை என் 303 ல் விழிக்க மாட்டோமா என்று அவன் மனம் எங்கித்தவித்து. சுத்தமாக தூக்கம் வரவில்லை, இன்று தூக்க மாத்திரை உதவியுடன் தூங்குவதில்லை என்று, உறுதியாக இருந்தான். கதவு திறக்கும், சத்தம் கேட்டு திரும்ப, சுமா அவனைப் பார்த்து சிரித்தவாறு வந்தாள்.

"இன்னும் தூங்கலையா மா?" மகனை, அம்மா என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள். சிரித்தான்.

சுமாவின் மனதில், மகனின் கல்யாணத்தைக் குறித்து பேசவேண்டும் என்ற எண்ணம். அவன் கால்மாட்டில் உட்கார, தனது காலை நகர்த்தி, அவளுக்கு இடம் கொடுத்தான்.

"அதுக்குள்ள உனக்கு 25 வயசு ஆயிடுச்சு!!" என்று சொன்னவள், மகனைப் பார்த்து சிரித்தாள்.

தனது தாய் தன்னிடம் எதோ பேச விரும்புகிறாள் என்று உணர்ந்தவன், எழுந்து அமர்ந்தான். ஏற்கனவே மகனின் கல்யாணத்தைக் குறித்து, தனது தந்தையிடம் பேசி இருந்தாள், அதற்கு அவர், இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று சொல்ல, அதில் உடன்பாடு இல்லை சுமாவுக்கு. இனியாவது, ஒரு தாயாக முடிந்த மட்டிலும் தன் மகனுக்கு செய்யவேண்டியதை சரியாக செய்துவிட வேண்டும் என்ற ஏக்கம் ஆவல் மனதில். ஆனால், அவளைக் காட்டிலும், மணியை சரியாக புரிந்து வைத்திருந்தார், அவனது தாத்தா. இருவரின் மனதிலும் ஏக்கம். சுமாவுக்கு மகனின் மானவாழ்வு குறித்த ஏக்கம் என்றா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here