இனியாவது, ஒரு தாயாக முடிந்த மட்டிலும் தன் மகனுக்கு செய்யவேண்டியதை சரியாக செய்துவிட வேண்டும் என்ற ஏக்கம் ஆவல் மனதில். ஆனால், அவளைக் காட்டிலும், மணியை சரியாக புரிந்து வைத்திருந்தார், அவனது தாத்தா. இருவரின் மனதிலும் ஏக்கம். சுமாவுக்கு மகனின் மானவாழ்வு குறித்த ஏக்கம் என்றால், அவனுக்கோ, அவனது பதினெட்டாவது பிறந்த நாளின் நினைவுகள் ஒருபுறம் என்றால், சுமா அந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்தது அவனது மனதில், இதே போன்றதொரு இரவில் தூக்கத்தில் தவறிப்போன அவனது பெரிய ஆச்சீயின் நினைவுகள். மதுவும், அவனது பெரிய அச்சீயும் அவனது வாழ்வில் ஏற்படுத்திய வெற்றிடம், அந்த வெற்றிடம் கொடுத்திருந்த ஏக்கம். அந்த ஏக்கம் அன்னையின் மடியை வேண்டியது. தன் தாயின் மடியில் படுக்க வேண்டும் என்ற ஏக்கம், கண்டிப்பாக மறுக்க மாட்டாள் என்று அவன் உணர்ந்து இருந்தாலும், ஏனோ தயங்கினான். பின் என்ன நினைத்தானோ, சுமாவின் மடியில், அவளுக்கு முதுகு காட்டி, தலை வைத்துப் படுத்தான். கடந்த சில மாதங்களாக ஒருவருக்கொருவர் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாலும், தாய்க்கும், பிள்ளைக்குமான, முதல் நெருக்கம், இது, நெக்குருகிப் போனால் சுமா. அவள் பேசவேண்டும் என்று நினைத்தது எல்லாம், மொத்தமாக மறந்து போயிருந்தது. அனைத்தையும் மறந்தவள், மகனை தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

***************

இன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன். நாக்பூரி ஒரு நட்சத்திர விடுதியில் அமர்ந்து இருந்தான், மணி.

"சார்!! எல்லாரும் வெயிட் பண்றாங்க!!" என்று அவனது உதவியாளர் சொல்ல, எழுந்து அறையை விட்டு வெளியேறினான்.

அன்று காலை, நிறுவனத்தின் சார்பில், இரண்டாவது சோலார் பவர் பிளான்ட்க்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்து முடிந்திருந்தது. மகாராஷ்டிராவின், வடகிழக்குப் பகுதி விதர்பா. தனி மாநிலம் கோரிக்கையின் பொருட்டு, அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பது வழக்கம். அடிக்கல் நாட்டு விழாவின் போது, அப்படி செயல்பட்ட அமைப்பு ஒன்று, பெரிய அளவில் போராட்டத்தை, அடிக்கல் நாட்டுவிழா நடந்த இடத்தில், நடத்தியது. அது சம்பந்தமாக பேசுவதற்கு தான், அந்த விழா நடத்தும் பொறுப்பேற்று நடத்திய ஆட்களை, கூட சொல்லியிருந்தான். அவன் அறைக்குள் நுழைந்ததுமே அதுவரை இருந்த சலசலப்புகள் அடங்கியது. காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவுடன், இன்று நடந்த விழாவிற்கு பொறுப்பானவர்களை, ஒருமுறை சுற்றி நோக்கினான்.

"சார்!! ஒரு வாரத்துக்கு முன்னாடியே, அவங்ககிட்ட பேசி, காம்பரமைஸ் பண்ணியாச்சு!!கைநீட்டி காசும் வாங்கிட்டாங்க!!"

"மூணு மாசத்துல ஆசெம்ப்லி எலக்சன், மூணு டிஸ்ட்ரிக்ட்ல, எப்படியும் ஒரு பத்து தொகுதிகளில், அந்த அமைப்பு, ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு!! அவங்கள கொஞ்சம் கவனமாததான் ஹாண்டில் பண்ணனும்!!"

"கூப்பிட்டு மறுபடியும் பேசலாம்!!"

"இந்த எலக்சன்ல, எதிர்க்கட்சி ஜெய்க்கிறதுக்குத் தான் அதிகமா வாய்ப்பு இருக்கு!!, ஆனால் இந்த தடவை கலெக்ஷன் பண்டஸ், எதிர்க்கட்சிக்கு அதிகமாக கொடுத்து!!, ஜெயிச்சதும் இவங்களா ஆஃப் பண்ணிரலாம்!!" என்று ஆளாளுக்கு, அவர்களுக்கு தோன்றிய யோசனைகளைச் சொன்னார்கள்.

"ஒருவேளை இந்த அமைப்பு ஒரு பத்து இடத்துல ஜெயிச்சா?" பொதுவாக கேட்டான் மணி.

"ஜெய்ச்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு, காசு கொடுக்கலாம்!!" என்று ஒருவர் சொல்ல அவரை பார்த்து சிரித்தான்.

"எதிர்க்கட்சிக்கு ஃபண்ட் அதிகமா கொடுங்க, அந்த அமைப்பு ஒரு இடத்தில் கூட ஜெயிக்க கூடாது!!" என்றான் மணி.

"ஒருவேளை அதையும் மீறி அவங்க ஜெயிச்சா? ரொம்ப பிராப்ளம் பண்ணுவாங்க!!" தனது கருத்தை தெரிவித்தார் ஒருவர்.

"அப்ப அவங்க ஜெயிக்காம இருக்குறதுக்கு, என்னலாம் பண்ணுனுமோ, அத்தனையும் பண்ணுங்க!! காசு வாங்கிட்டு நாணயம் இல்லாம செயல் படுறவாங்க, கொள்கைனு வந்தாலும் நாணயம் இல்லாமத்தான் செயல் படுவாங்க!!" என்றான்.

தொழில் விஷயங்களில் அவனுக்குள் இருந்த நெருப்பின் கணல், சிறிதும் குறையாமல் இருந்தது.

*************

இரண்டு மாதம் கழித்து, நேத்ராவின் வீட்டில். நீண்ட நாட்களாக, இருவரும் மணியை, அவர்களது வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்க, ஒருவழியாக இன்றுதான் முதன்முதலாக அவர்களது வீட்டிற்கு வந்திருந்தான். ஞாயிறு மதிய உணவை முடித்துக் கொண்டு, மூவரும் கதையை அடித்துக் கொண்டிருந்தனர்.

"டீ குடிக்கிறியா?" என்று கேட்ட,

நேத்ராவைப் பார்த்து, குடிக்கிறேன் என்று தலையசைத்தான், மணி. அவள் எழுந்து சென்றதும், மணி பார்த்து சிரித்த பிரதீப். பின், மணியை கூர்மையாக பார்த்தவாறு,

"நான்!!, ஒன்னு கேட்டா!! தப்பா, எடுத்துக்க மாட்டியே?" கேள்வியுடன் நிறுத்தியவன், பின்

"மன்னிக்க முடியாத தப்புன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here