ஞாயிறு மதிய உணவை முடித்துக் கொண்டு, மூவரும் கதையை அடித்துக் கொண்டிருந்தனர்.

"டீ குடிக்கிறியா?" என்று கேட்ட,

நேத்ராவைப் பார்த்து, குடிக்கிறேன் என்று தலையசைத்தான், மணி. அவள் எழுந்து சென்றதும், மணி பார்த்து சிரித்த பிரதீப். பின், மணியை கூர்மையாக பார்த்தவாறு,

"நான்!!, ஒன்னு கேட்டா!! தப்பா, எடுத்துக்க மாட்டியே?" கேள்வியுடன் நிறுத்தியவன், பின்

"மன்னிக்க முடியாத தப்புனு!!, ஒன்னு இருக்கா டா?" சீரியஸாகவே கேட்டான் பிரதீப். அதற்கும் சிரித்தான், மணி.

"இல்ல!!, எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும்!! உன்ன அவளோ? இல்ல, அவள நீயோ? மன்னிக்க முடியாத தப்புனு ஒன்னு இருக்கா? என்ன?" மீண்டும் கேட்டான் பிரதீப். இந்த முறைகொஞ்சம் சத்தமாகவே சிரித்தான், மணி. அவனின் சிரிப்பின் போலித்தனத்தை உணர்ந்த பிரதீப்பும் விரத்தியாக சிரித்தான்.

"பண்ற அயோக்கியத்தனம் எல்லாம் பண்ணிட்டு!! இப்ப திருந்திட்டேன்னு சொல்லிட்டா!!, அந்த அயோக்கியன், யோக்கியமாககிட முடியுமா?" என்று மணியின் சிரிப்பில் இருந்த வலி, பிரதீப்பை அதற்கு மேலும், அதைப்பற்றி பேச விடவில்லை.

“யாரு யோக்கியன்? யாரு அயோக்கியன்?” என்று கேட்டவாறு வந்த நெத்ராவிடம், ஜினாலியின் திருமானதிற்கு சென்ற கதையைச் சொல்ல, அவளும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

*********

"எப்படி இருக்கா?" வீட்டை விட்டு வெளியேறி, அவனது காரின் அருகில் சென்றதும், திரும்பி வழியனுப்ப, வந்த நேத்ராவைப் பார்த்து கேட்டான்.

"நல்லா இருக்கா, யூஸ்ல இருக்கா!!"

"பேசினியா?" மதுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்டான்.

"பேஸ்புக்கில் போட்டோ பார்த்தேன்!! நானும் அவகிட்ட பேசி வருஷம் ஆச்சு!! கடைசியா அவ கல்யாணத் தன்னைக்கு பேசினாது தான். அவளும், அதுக்கப்புறம் பேசல, நான் ஒரு கோவத்துல விட்டுட்டேன்!!"

"முடிஞ்சா, எனக்காக ஒரு தடவை பேசு!!" என்றவனிடம்

"சரி நான் அவகிட்ட பேசுறேன்!! மாயா யாரு? அன்னைக்கு, நான், உன் ஆபீஸ் வந்தப்ப!!, கதவை திறந்திட்டு வந்தாளே, ஒரு பொண்ணு!!, அவதான் மாயா வா? என்று கேட்ட நேத்ராவிடம் இல்லை என்று தலையசைத்தவன்,

"அவ பேரு ஸ்ரீ!!" சிரித்தான்

"யார் அந்த பொண்ணு?" கண்களை குறுக்கி மணியைப் பார்த்து கேட்டாள், நேத்ரா.

"அது ஒரு பெரிய கதை!!, இன்னொரு நாள் சொல்றேன்!!' என்று சிரித்தான்.

"அப்ப மாயா?" குழப்பமாக கேட்டாள்.

"நேரம் வரும்போது கண்டிப்பா அவள காட்டுறேன்!! சிரித்தவன், அவளிடமிருந்து விடை பெற்றுச் சென்றான்.

****************

நீகழ் காலம்.

மணியின் பெயர் அழைக்கப்பட, கலந்தாய்வு மேடையில் எறியதும், பலத்த கைதட்டல், சரித்தவன், ஏற்கனவே அமர்ந்திருந்த இருவரிடம் கைகுலுக்கிவிட்டு, தனக்கான இருக்கையில் அமர்ந்தான்.

இரண்டு மணி நேரம் கழித்து, காரில் பயணித்துக் கொண்டிருந்தான், பதட்டமாக இருந்தான், மணி. காதுக்கு அழைபேசியைக் கொடுத்திருந்தவன், அந்த அழைப்பு எடுக்கப்பட்டதும்,

“மது யுஸ்ல இருக்கானு சொன்ன?”

“அதுக்கு இப்போ என்ன?”

"அவ இங்க டெல்லில இருக்கா!! இப்போ!!” என்றவன் எதிர்முனையில் பேசியவரின் பதிலை எதிர்பார்க்காமல், அழைப்பை தூண்டித்தான்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் சீகிரெட்டை எடுத்துப் பத்த வைத்தவன், புகையை உள்ளிலுத்தான், மூக்கின் வழியே, உள்ளிலுத்த புகையை வெளியேற்றினான்.

மது, மீண்டும் அவன் வாழ்வில் வந்தாள்.

************* மணி அமர்ந்திருந்த விமானம் கோயம்புத்தூர் நோக்கி பறந்து கொண்டிருந்தது. மணியின் பதட்டம் கொஞ்சம் தணிந்திருந்தது, ஆனால், இரண்டு மணிநேரத்துக்கு முன், வாழக்கை அவனுக்கு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து, இன்னும் அவன் முழுமையாக மீண்டுருக்கவில்லை, முடியுமா? என்றும் தெரியவில்லை. அந்த கருத்தரங்கத்திற்கு செல்லும் பொழுது, மிகவும் தெளிவான மனநிலையுடன் இருந்தான். அந்தக் கருத்தரங்கத்தில் கேட்கப்படப் போகும் கேள்விகளில், ஒரே ஒரு கேள்விக்கான பதிலை அளிக்கத்தான், அந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளவே ஒப்புக் கொண்டு இருந்தான்.

சில மாதங்களுக்கு முன் திட்டமிட்டது போலவே, அந்த அமைப்பு அனைத்து தொகுதிகளிலும் தோற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, எதிர் கட்சி ஆட்சிக்கு வர, மணியின் நிறுவனத்தின், ப்ராஜக்ட் கட்டுமானப் பணிகள், வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது. கட்டுமான பணியின் போது ஏற்பட்ட, ஒரு சிறு விபத்தில், ஏழு பேர் மரணித்துவிட, அதை பெரும் பிரச்சனையாக்கி, தேர்தல் தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது, அந்த அமைப்பு. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது, வியாபார கணக்குகளை காட்டிலும், உளவியல், உணர்வுகளின் தாக்கம் அதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here