அதைத் தொடர்ந்து, எதிர் கட்சி ஆட்சிக்கு வர, மணியின் நிறுவனத்தின், ப்ராஜக்ட் கட்டுமானப் பணிகள், வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது. கட்டுமான பணியின் போது ஏற்பட்ட, ஒரு சிறு விபத்தில், ஏழு பேர் மரணித்துவிட, அதை பெரும் பிரச்சனையாக்கி, தேர்தல் தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது, அந்த அமைப்பு. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது, வியாபார கணக்குகளை காட்டிலும், உளவியல், உணர்வுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த விபத்தின் காரணமாகவும், அதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாகவும், மணியின் நிறுவனத்தின் பெயர் ரொம்பவே அடி வாங்கியிருந்தது. அதை சரிக்கட்டும் முயற்சிகளின், ஒரு பகுதியாக, அவன் இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள சம்மதித்தான். இளம் வயதில் வெற்றி கொள்பவர்களை பெரிதாக தூக்கிக் கொண்டாடும் சமூகம், நமது, இந்திய சமூகம். சமூகத்தின் அந்த இயல்பை, தன் வயதை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஊடகங்களின் வழியே, தனது நிறுவனத்தின் முகமாக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம், அவனுக்கு. அந்த விபத்தைப் பற்றிய கேள்விக்கான பதிலை, ஏற்கனவே தயாராக வைத்திருந்தான். அதை மட்டுமே மனதில் ஓட்டியபடி, தெளிவாக அந்த மேடையில் அமர்ந்திருந்தான்.

இவனோடு சேர்த்து மொத்தம் நான்கு இளம் தொழில் முனைபவர்கள், அந்த கருத்தரங்கத்தில் விருந்தினராக பங்கேற்றிருந்தனர். நான்கு விருந்தினர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார், நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவருக்கு ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயது, நாட்டின் மிகப் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவர். மணியை, அறிமுகப்படுத்திப் பேசும் பொழுது, அவனது நிறுவனத்தின் செயல்பாடுகளை காட்டிலும், அவனது வயதையே முன்னிறுத்தி பேசினார். எதை மணி தன் பலமாக நினைத்துக் கொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நினைத்தானோ, அதைவைத்தே அவனை சிறுமைப் படுத்துவது போல, வஞ்சப் புகழச்சியில் பேசினார். இந்தியத் தொழில் துறையின் "போஸ்டர் பாய்", "மேன் வித் தி மிடஸ் டச்" என்று அவர் மணியை அறிமுகம் செய்து பேசியது நல்ல எண்ணத்தில் கூட இருக்கலாம். மணியை அறிமுகப் படுத்திப் பேசும் பொழுது அவர் உபயோகப்படுத்திய "வொண்டர் கிட்" வார்த்தை அவனை உரச கூடாத வகையில் உரசி, அவன் உணர்வுகளை தட்டி எழுப்பியது. சிலர் நொடிக்கு முன் அமைதியாக இருந்த மணியின் மனது, கொந்தளித்துக் கொண்டிருந்தது, அந்த ஒரு சொல்லால்.

ஒருசொல், ஒருவரது வாழ்க்கையில் பெரிய உள்ள குழப்பத்தை ஏற்படுத்தும், அமைதி இழக்கச் செய்யும் என்பது அந்த வார்த்தை, ஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பை, முக்கியத்துவத்தை கொண்டே உணர முடியும். திகட்டாத இன்பத்தையும், உயிர்கொல்லும் வலி என இரண்டையும், அவன் வாழ்வின் பதின் வயதிலேயே கொடுத்திருந்தான், அந்த "வொண்டர் கிட்" மணிகண்டன். சில நொடிகள், தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறக்கும் அளவுக்கு, அவனது புலன்கள் மரத்துப் போய்விட்டன. சில நொடிகளில்தான், சுதாரித்துக் கொண்டு, அறிமுகத்திற்கு நன்றி சொன்னாலும், அவனது உள்ளமோ எப்பொழுது இந்த மேடையில் இருந்து இறங்குவோம்? என்று நினைக்க ஆரம்பித்திருந்தது.

தொகுப்பாளர்: "இந்தியத் தொழில்துறையின் "வொண்டர் கிட்" என்று உங்களை குறிப்பிடுவதை எப்படி பார்க்கிறீர்கள்?"

முதல் கேள்வியே அவனது மனசஞ்சலத்தை அதிகப்படுத்தியது. "முட்டாள்கள் தான் அதிசயத்தை நம்புவார்கள்" என்று சொல்லு இன்று கொந்தளித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு

மணி: "நான் அதிசயங்களை நம்புவதில்லை!!" புன்னகைக்க முயன்று தோற்றுப் போனான்.

இரண்டு வருடங்களுக்கு முன்வரை உணர்வுகளை கட்டிப்போடுவதில் இணை இல்லாமல் இருந்தவன, உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தான். இன்னும் விளக்கமாக பேசுவான் என்று எதிர்பார்த்திருந்த தொகுப்பாளர், அவன் பதில் சொல்லி முடித்து விட்டான் என்று உணர்ந்ததும், மற்ற மூவரிடமும், தன் அடுத்த சுற்று கேள்வியை, கேட்க ஆரம்பித்தார்.

தொகுப்பாளர்: "கடந்த ஒன்றரை வருஷத்துல, உங்களோட சொத்து மதிப்பு 46 மடங்கு!!, 46 சதவீதம் இல்ல, 46 மடங்கு உயர்ந்திருக்கு!! இந்த வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?"

ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்தவனை, மேலும் தூண்டியது, அவனை நோக்கி கேட்கப்பட்ட, இரண்டாவது கேள்வி. நால்வருக்கு ஒரே மாதிரியான கேள்விதான் என்றாலும், வார்த்தைத் தேர்வுகளில் தெளிவாக அடித்தார், அந்த தொகுப்பாளர்.

மணி: "ஒரு சின்ன திருத்தம், 46 மடங்கு உயர்ந்தது, என்னோட சொத்து மதிப்பு இல்ல, ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் சந்தை மதிப்பு!!" தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பதிலளித்தாள்.

தொகுப்பாளர்: "இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

தொடர்ந்து சீண்ட பட

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here